என் வேர்களுக்கு அடியில் ஒரு புத்தன் அமர்ந்திருக்கிறான்...
எனவே...
இந்த கதை உனக்குப் புரிந்தால் நீ புத்தன் இல்லையென்றாலும் கூட நீ புத்தனே.
காட்சி ஒன்று
தொலைக்காட்சியில் விநாயக சதுர்த்தியின் சிறப்பு நிகழ்ச்சிகள்... இடையே ஒரு மணிநேர மின்வெட்டு... நாற்காலியில் அமர்ந்தவாறே ஜன்னல் வழியாய் தொலை தூரத்தில் மங்கலாகத் தெரிந்த மலை தொடர்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தேன்... ஜன்னலையும்இ மலையையும் மீறி இரண்டு அல்லது மூன்று வீடுகளை அடுத்த மொட்டை மாடியில் முகம் தெரிந்த பெண்ணொருத்தி துணிகளைக் கொடியில் போட்டுக்கொண்டிருந்தாள். கிளிப் போடப்பட்ட துணிகள் வெயிலில் ஆழ்ந்து நிசப்தமாய் தொங்கிக் கொண்டிருந்தன... பிழியப்படாத ஆடைகளிலிருந்து தண்ணீர் 'சொர்' என்று ஏற்றிக் கொண்டிருந்தது... பார்த்துக் கொண்டே... அப்படியே அயர்ந்து போனேன்...
காட்சி ஒன்றில் மற்றொன்று...
ஆறு ஒருவித தினவுடன் ஒருபக்கமாய் இழுத்துக் கொண்டிருந்தது... அதை மற்றொரு பக்கமாய் முரட்டுப் பிடிவாதத்துடன் இழுத்தவாறு கடந்து கொண்டிருந்தேன். நெஞ்சு மீறிய ஆற்றின் தளும்பல் என் முலைகளின் காம்புகளில் பட்டு அமிழ்வதும் பின் எழுவதுமாய் போராடியது... முலை நுனிகள் அதில் சில்லிட்டு விறைத்து நின்றன. கால்களை நீருக்கு அடியில் துழாவியவாறே நடக்க முற்பட்டுக் கொண்டிருந்தேன் ஆற்றின் குளிர்ச்சியில் சிறுநீர் இயல்பாகச் சன்னமாய் வெதுவெதுப்புடன் நீரில் கலந்தது... என் முன் ஆற்றின் சுழற்சியில் நாள்பட்ட இலை ஒன்று தன் சுயம் இழந்து அலைக்கழிக்கப்பட்டு ஆற்றோடு போயிற்று... அதைப் பார்த்தமாத்திரத்தில் ஒருவித பயம் என்னைத் தொற்றிக்கொண்டது. இருந்தபோதும் கரைமீது கண்கொண்டு ஆற்றின் இழுப்பிற்கு பிடிகொடாமல் என்னை இழுத்துக் கொண்டே போனேன்.... ஆற்றில் எனக்கு எதிர்ப்பதமாய் சில நபர்கள் என்பதைத் தவிர நான் மட்டுமே தனியே போய்க் கொண்டிருந்தேன்...
ஒரு சில பனங்காடைகளின் அலறல்களைத் தவிர மற்றும் சில பெயர் அறியா பறவைகள் தண்ணீரின் மேல் நிலைகொண்டு பறந்தன... ஆற்றின் போக்கில் அவைகள் ஒவ்வொன்றிற்கும் ஒருவகை போக்கு... காலம் மெல்ல கடந்து... எப்படியோ கரையில் காலை முட்டுக் கொடுத்து என்னை நிறுத்திக் கொண்டேன்.... கரையை ஒட்டிய தண்ணீர் படுகைகளில் ஆற்றின் தறிகளைப் பிடித்தவாறே வேறு சில தண்ணீர் பூச்சிகள் ஒதுங்கிக் கொண்டிருக்கின்றன. கரை சிறிது மேடாய் உயரத்தில் நின்றது...
காட்சி ஒன்றில் இன்னுமொன்று...
துணிகளை உலர்த்திக் கொண்டிருந்த பெண்ணை கைகொடுக்க ஒருவித தயக்கத்துடன் அழைத்தேன். கை கொடுக்க எத்தனித்த அவள்... நினைவிற்கு வந்தவளாய் 'நீ எந்த ஊர்?' என்றாள்.
உரத்த குரலில் நான் இன்ன சாதியில் இன்ன பிரிவைச் சார்ந்தவன்... என்றேன்... மெல்ல முறுவலித்து கை கொடுத்துத் தூக்கினாள்...
தொலைவில் சூரியன் உண்மையாய் சுட்டெரித்துக் கொண்டிருந்தது என் மணவெளியை...
பின்குறிப்பு...
குறியீடுகளைத் தாண்டி வாசிக்க முற்பட்டால்...இக்கதையில் நீங்களும் ஒரு கதாபாத்திரம் தான்.......